புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் 28ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை அன்று செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒவ்வொரு அறையிலும் பயன்படுத்தப்படும் மேசைகளின் எண்ணிக்கை 5ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் PPE கிட் அணிய விருப்பப்பட்டால் அவர்களுக்கு உடனே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விருப்பமுள்ள வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் 28ம் தேதி நடைபெறவுள்ள கொரோனா சிறப்பு பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.







