புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக வைத்திலிங்கத்தை நியமித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு வரவுள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களுக்கு மாநிலத் தலைவர்களை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்.
புதுச்சேரி மாநில தலைவராக இருந்த ஏ.வி.சுப்ரமணியனை விடுவித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்திற்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா பொறுப்பாளராக பிசி விஷ்ணு ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டெல்லி மற்றும் அரியானா பொறுப்பாளராக தீபக் பாபாரியா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக மன்சுர் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்துக்கு சக்திசிங் கோகிலும், மும்பைக்கு வர்ஷா கெய்க்வாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை மாற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.