புதுச்சேரி கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

புதுச்சேரியில் உள்ள தனியார் செல்போன் மற்றும் கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர்…

புதுச்சேரியில் உள்ள தனியார் செல்போன் மற்றும் கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு புகார் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் புகார் எதிரொலியாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று காலை முதல் சென்னை ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல செல்போன், கணினி, மடிக் கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான பிளக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கிளையான புதுச்சேரியின் தவளைகுப்பம் பகுதியிலுள்ள லெவோனா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு வாகனங்களில் வந்துள்ள அதிகாரிகள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.