சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையின் பரபரப்பான பக்கங்களுள் முக்கியமான ஒன்று தியாகராய நகர்.…

சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னையின் பரபரப்பான பக்கங்களுள் முக்கியமான ஒன்று தியாகராய நகர். திநகர் என்று சென்னை மக்களால் அழைக்கப்படும் இப்பகுதியில் எப்போதும் மக்களின் கூட்டம் அலைமோதும். 24 மணி நேரமும் பரபரப்பாகவே இங்குள்ள சாலைகள் காணப்படும்.

இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது.சுமார் 3 அடி அகலும்,10 அடி ஆழமும் உடையதாக இந்தப் பள்ளம் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து வாகனப் போக்குவரத்து மாற்று வழிக்கு திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த சாலையில் வழக்கமாக செல்லும் தடம் எண் 12x,11 ஆகிய பேருந்துகள் வடக்கு போக் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.