ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு – அமித் ராய். தந்தை மகனுக்கு இடையேயான உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிச.1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அனிமல் படத்தின் டீசரை 5 மொழிகளிலும் படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ளனர்.







