முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

புதுச்சேரியில் கொரோனா வரி நீக்கப்பட்டதால் மதுபானங்கள் விலை குறைந்து விற்பனையாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. புதுச்சேரியின் முக்கிய வருவாய் ஆதரமாக மதுபான விற்பனை இருப்பதால் மே மாதம் 24ஆம் தேதி மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தின் மது விலையை விட புதுச்சேரி மது விலை குறைவாக இருந்ததால் தமிழகத்தில் இருந்து குடிமகன்கள் புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஆகும் செலவுகளை சமாளிக்கவும், தமிழகத்தில் இருந்து மது வாங்க புதுச்சேரிக்குள் வராமல் இருக்கவும் மதுபானங்களுக்கும், சாராயத்திற்கும் கொரோனா வரி விதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இணையான விலையில் புதுவையில் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீக்கப்பட்டு விலை குறைத்து விற்பனை செய்ய புதுச்சேரி கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மதுபானங்கள் விலை குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு ரூ. 5 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி!

Jeba Arul Robinson

4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan

உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு புதிய தளர்வுகள்

Halley karthi