உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் அமையும் மாநிலம் இதுதான்!

இந்தியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் தெலுங்கானாவில் அமைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் அமைக்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் பகுதியில்…

இந்தியாவிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் தெலுங்கானாவில் அமைக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் அமைக்கப்பட உள்ளது.

தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் இந்தியாவிலே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைய உள்ளது. இது 100 மெகாவார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 450 எக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் சூரிய மின் நிலையம், ரூ. 423 கோடி செலவில் கட்டமைக்கப்பட உள்ளது.

இந்த சூரிய மின் நிலையத்தை அமைக்க என்.டி.பி.சி (National Thermal Power Corporation) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய மின் நிலையம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும். மேலும் இது வருகின்ற மே மாதம் முதல் செயல்பட தொடங்கும்

இதுபோல் உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின் நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியில் அமைக்கப்பட உள்ளது. 3,000 கோடி ரூபாய் செலவில் அமைவிருக்கும் இச்சூரிய மின் நிலையம், 600 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் ஆற்றால் கொண்டது. மேலும் இந்த நிலையம் 2022ம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.