புதிய மதுபான தொழிற்சாலைகளை திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலால்துறை இணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஏற்கனவே 5 மதுபான தொழிற்சாலைகளும் ஒரு பீர் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இந்நிலையில் மாநில வருவாயை பெருக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு முடிவு மேலும் சில மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக கலால்துறை நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம் என கலால்துறை இணை ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், புதுச்சேரி கலால் விதிகள் சட்டம் 1970-ன்படி விண்ணப்பிக்க வேண்டும். மதுபான தொழிற்சாலை முதலீடு, சராசரி உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். ஆலை வளாக அமைப்பு, தண்ணீர் தேவைகள், சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். எந்த இடத்தில் ஆலை அமைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எந்தவித குற்ற பின்னணியும் இல்லை மற்றும் மாநில அரசுகளின் கருப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை விண்ணப்பதாரர் உறுதி செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டு வருமான வரி தாக்கலை சமர்பிக்க வேண்டும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியாகவும், அதில் விண்ணப்பதாரரின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர், இந்தியாவில் மதுபான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் கண்டிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 லட்சம் பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருத்தல் வேண்டும், இதுதவிர கலால் ஆணையர் நிபந்தனைகளை ஏற்க வேண்டும், கலால்துறைக்கு விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமையுண்டு, இந்த நிபந்தனைகளை ஏற்று மதுபான ஆலை நடத்த முன்வருவோருக்கு முதல்கட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.