“ஊரின் பெயரை காணவில்லை”; போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரை காணவில்லை’ என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர்…

வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரை காணவில்லை’ என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர் பலகை சில நாட்களுக்கு முன்பு அரசின் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது.பேருந்து நிறுத்ததிற்கான பெயர் பலகையில் குறிமேடு என்ற பெயருக்கு பதில் சின்னப்பணிச்சேரி பேருந்து நிறுத்தம் என பெயரிடப்பட்டிருந்ததால் குறிமேடு பகுதி குடியிருப்பு வாசிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்ட போது அவர் ‘அரசின் பதிவேட்டில் உள்ளதை தான் நாங்கள் பெயர் பலகையில் வைத்துள்ளோம் ‘ என பதில் கூறியுள்ளார்.


அதன்பின் பல அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பெயர் பலகையில் பெயர் மாற்றப்படாததால் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் அங்கு வந்த மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜி போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களிடம் பேசி மக்களை அங்கிருந்து கலைந்து போக செய்தார்.
பேருந்து நிறுத்த பெயர்பலகையில் தங்கள் பகுதியின் பெயர் காணவில்லை என மக்கள் சாலை மறியல் செய்தது அப்பகுதியில் பேசு பொருளாய் மாறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.