புதுச்சேரி சபாநாயகராகிறார் பாஜக எம்.எல்.ஏ செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சட்டமன்ற பாஜக எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக சார்பில், சபாநாயாகர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிறுத்தப்பட்டார். இவரை முதலமைச்சர் ரங்கசாமி…

புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சட்டமன்ற பாஜக எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகிறார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக சார்பில், சபாநாயாகர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிறுத்தப்பட்டார். இவரை முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்த நிலையில் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்தார். இதையடுத்து சட்டப்பேரவை செயலர் முனுசாமியிடம் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், செல்வம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.