ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முக்ர்ஜி, தமிழக எம்பி வசந்தகுமார், பாடகர் எஸ்பிபி, புதுச்சேரி நியமன எம்எல்ஏ சங்கர் உள்ளிட்டோருக்கு மௌன அஞ்சலி செலுத்தி பேரவை பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதான கூட்டணி கட்சியான திமுக பங்கேற்காகததால் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி, அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள், சட்டமன்ற வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்