ஆசிரியர் தேர்வு தமிழகம்

ரஜினி ஆதரவாளர்கள் எந்த கட்சியில் இணைவார்கள்?

கட்சி தொடங்குவார், சட்டமன்ற தேர்தலில் போடியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கபட்ட நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் கடைசி நேரத்தில் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் . இது ரஜினி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது. அதன் பிறகு ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், என அவரது ரசிகர்கள் போராட்டம் கூட நடத்தினர். ஆனால் தனது முடிவில் மாற்றமில்லை, என திட்டவிட்டமாக அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் தான், தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஸ்டாலின் என்பவர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். அதேபோல் தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள், திமுக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது அரசியல் களத்தில் பேசு பொருளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் எதிரொலியாக, ரஜினி ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சேரலாம், என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்திருக்கிறார்.

ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து, 3 ஆண்டுகளாக பலர் அதற்கான திட்டப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். ரஜினியுடன் சேர்ந்து தங்களுக்கான அரசியல் நோக்கங்களையும் வளர்த்து கொண்டனர். இப்படியிருக்க ரஜினிக்கு அரசியலுக்கு வராதததை அடுத்து, வேற கட்சிகளை நோக்கி அவர்கள் பார்வை செல்வது இயல்பாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், கட்சிகளில் ரஜினி மன்ற உறுப்பினர்கள் இணைவதும், அதனையடுத்து வெளியாகியிருக்கும் ரஜினி மக்கள் மன்ற அறிக்கையும், இயல்பான எதிர்வினையே என்பதும் நிதர்சனம்.

இதனையடுத்து அவர்கள் எல்லாம் ஒரே கட்சியில் இணைவார்களா, அல்லது தங்களது பகுதியில் செல்வாக்கு உடைய கட்சியில் இணைவார்களா, என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் ரஜினியின் அமைப்பில் இணைந்து அரசியல் தாகம் வளர்த்து கொண்ட பலர், பல்வேறு கட்சிகளில் சேர வாய்ப்புகள் அதிகமாயிருக்கிறது. இது, ரஜினியில் ஆதரவு கிடைத்தால் வரவேற்போம், என கூறிய அதிமுக, பாஜக கட்சியினருக்கு, இது ஏமாற்றமாகவே அமையும்.

தேர்தல் சமயங்களில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதுதான், வழக்கமாக பேசுபொருளாகும். இம்முறை அவரின் மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியில் சேரப்போகிறார்கள், என்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”

Web Editor

‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்

G SaravanaKumar

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

G SaravanaKumar

Leave a Reply