புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேர் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது,
6 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மூன்று சுயேட்சை உறுப்பினர்களை தனக்கு ஆதரவாக இழுத்து தனது பலத்தை உயர்த்தி வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பாஜக தங்களுக்கு இந்த சீட்டை ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தனியார் விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யும் முழு அதிகாரத்தை ரங்கசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் மூன்று சுயேட்சை உறுப்பினர்களும் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் தனது பலத்தை உயர்த்தியிருப்பது, பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








