முக்கியச் செய்திகள் தமிழகம்

குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை

குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நாளை ஆலோசனை மேற்கொள்கிறது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன.

இந்நிலையில், குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில், குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து தேர்வுகளின் தேதி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

மேலும், அனைத்துவகை தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

7 பேர் விடுதலை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

Halley karthi

மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கினார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

Gayathri Venkatesan

“நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி

Gayathri Venkatesan