முக்கியச் செய்திகள் இந்தியா

புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!

புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி , புதுவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக
கொரோனா நோய் தொற்று 29 முதல் 40 வயதுடையவர்களை அதிகமாக தாக்கி வருகிறது. புதுவையில் ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், வருகிற மே 24-ம் தேதி வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு நேரத்தில் சரக்கு மற்றும் பொது போக்குவரத்து 50% பயணிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!

Saravana Kumar

உ.பி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வீட்டுக்காவலில் அகிலேஷ் யாதவ்

Halley Karthik

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Vandhana