முழு ஊரடங்கில் மெட்ரோ ரயில் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்றால் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கின் போது
காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும்.பால் விநியோகம், பத்திரிகை விநியோகம் செய்வதற்குத் தடையில்லை. மருந்தகங்கள், மருத்துவமனைகள் முழு நேரமும் செயல்படும்.
பெட்ரோல் பங்குகள் முழு நேரம் செயல்படும். முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்களில் காலை 6 முதல் 10 வரையும், மதியம் 12 முதல் 3 வரையும், மாலை 6 முதல் 9 வரையும் பார்சல் வழங்கப்படும் எனவும் வங்கிகள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், சென்னையில் மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.







