கிருஷ்ணகிரி பகுதி அருகே விவசாயிகள் பயன்படுத்தி வரும் 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் அபகரிப்பதை தடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே, விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரை புறம்போக்கு
நிலம் அபகரிக்கபடுவதாகவும் இதனை தடுக்க கோரி, வி.சி.க பிரமுகர் மாதேஷ், திப்பனப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது..
கிருஷ்ணகிரி அடுத்து திப்பனப்பள்ளி, ஜிஞ்சுப்பள்ளி ஆகிய பஞ்சாயத்துகள் உள்ளன. இங்குள்ள 200 ஏக்கர் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தில், சுமார் 40 ஏக்கர் அளவிலான நிலங்களில் ஊர் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த புறம்போக்கு நிலத்தை ஜிஞ்சுப்பள்ளி ஊர் கவுண்டர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் ஏலம் விட்டு கற்கள், மண் போன்றவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்கிறனர். விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.
மேலும், விவசாயம் செய்து வரும் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்காக ஆர்.ஐ., மூலம்
நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் விவசாயம்
செய்து வரும் ஏழை விவசாயிகள், தொடர்ந்து இந்த நிலங்களில் விவசாயம் செய்ய
அனுமதியளிக்க வேண்டும்.
அரசு திட்ட பணிகளுக்காக இந்த நிலங்களை கோரும் பட்சத்தில் விவசாயிகள் நிலங்களை வழங்கவும் தயாராக உள்ளனர். எனவே, மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலத்தை கேட்டு மிரட்டுபவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறுபிட்டு இருந்தனர்.
ம. ஶ்ரீ மரகதம்







