கேரள பட்ஜெட்டில் அறிவித்தது போன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்ததால், ஏராளமான கேரள வாகனங்கள் தமிழக எல்லை பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு வந்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன.
கேரளா பட்ஜெட்டில் அறிவித்தது போன்று பெட்ரோல் விலை 103.87 காசுகளில் இருந்து உயர்ந்து 110 ரூபாயாகவும், டீசல் விலை 95.50 காசுகளில் இருந்து உயர்ந்து 98.70 காசுகளாகவும் விற்கப்படுகிறது.
இந்த பட்ஜெட் அறிவிப்பிற்கு முன்னரே கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்ததால், தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக எல்லைப்புற பெட்ரோல் பங்குகளுக்கு வந்து குறிப்பிட்ட அளவு வாகனங்களில் எரி பொருள் நிரப்பி வந்தன. இப்போது இந்த விலை உயர்வால், தமிழகத்தில் கேரளாவை விட பெட்ரோல் 6 ரூபாய் குறைவாகவும் டீசல் 3 ரூபாய் குறைவாகவும் விற்பனைச் செய்யப்படுகிறது.
இதனால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள வாகனங்கள், தமிழக பெட்ரோல் பங்குகளுக்கு வந்து எரி பொருள் நிரப்பி செல்கின்றன. இந்த விலை உயர்வால், தமிழக பங்குகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. மேலும், வரும் நாட்களில் கேரள வாகனங்கள், எரி பொருளுக்காகத் தமிழகத்திற்கு வரும் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புகள் உள்ளன.சௌம்யா.மோ






