டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம் – அபிஜீத் தீப்கே கைது!

ஜந்தர் மந்தரில் போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை நகர் முழுவதும் தடுப்பு அனைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தியும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வர முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட நபர்கள் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை பொருத்தவரை 20 பாதுகாப்பு மண்டலங்களாக பிரித்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதிக்கு யாரும் ஒன்று கூட முடியாதபடி காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தடுப்பு விழிகள் அமைத்துவாகன தணிக்கையில் ஈடுபட்டும், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்த மும்பையில் இருந்து விமானத்தில் வந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பிரபல யூடியூபர் ‘துருவ் ரத்தி’ உட்பட 500-க்கும் மேற்பட்ட சிஜேபியினர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.