பழனி கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேச வந்த திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், பழனி கோயில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பழனி கோயில் உதவி ஆணையர் லட்சுமி அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், லட்சுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து உதவி ஆணையர் மீது அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்த போராட்டக்காரர்கள் அத்துமீறி கோயில் இணையாணையர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். கோயில் சார்பாக வீடியோ எடுத்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவரை தாக்கிய போராட்டக்காரர்கள், கேமராவையும் பிடுங்க முயற்சித்ததை அடுத்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.