முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவில் உழைப்புக்கு தான் இடம், உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயார் -அமைச்சர் ரகுபதி 

உழைப்புக்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடமே தவிர வாரிசுக்கு இடம் இல்லை. எனவே  உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது திராவிட கழக தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனைத்து அமைச்சர்களும் கழகப் பொறுப்பாளர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு அமைச்சருடன் சேர்ந்து செயல்படுவதில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார்.

அத்துடன் தலைவர் கருணாநிதி தளபதி ஸ்டாலின் எப்படி உழைத்தார்களோ அதுபோல் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உழைத்த உழைப்பு தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலிலும் அவரின் உழைப்பை பார்த்திருக்கிறோம் என்றார்.

மேலும், ஒற்றை செங்கலை வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்து அன்றைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கும் மத்திய அரசுக்கும் பாடம் புகட்டியவர். எழுச்சி மிகுந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார் என கூறினார்.

அத்துடன், உழைப்புக்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடமே தவிர வாரிசுக்கு இடம் இல்லை. எனவே  உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். வாரிசு என்ற பெயரில் அவர் திணிக்கப்படவில்லை உழைப்பாள் தான்
அவர் வந்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மைக்ரோசாஃப்ட் CEO சத்ய நாதெல்லாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது

EZHILARASAN D

செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்குகளை வெளியிடத் தயார்: அமைச்சர் மெய்யநாதன்

Web Editor

அதீத உடற்பயிற்சி மாரடைப்புக்கு காரணமா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்

EZHILARASAN D