நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றி

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.   நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

 

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், புளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து அதிக சக்தி கொண்ட ராக்கெட் மூலம் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

ஆர்டமிஸ்-1 என்ற இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டத்திற்கான முயற்சிகளை நாசா செய்து வந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னை காரணமாக இரண்டு முறை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சோதனையை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அப்பல்லோ விண்கலத்திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இதற்கான சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், அது திடீரென கைவிடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.