கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தநிலையில், வரும் 5-ந் தேதி தொடங்கும் கூட்டத் தொடர் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வரும் 5-ம் தேதி ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் தை திங்கள் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிப்பது மற்றும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.