காரை கடித்து இழுக்கும் புலி: வைரல் வீடியோ

மகேந்திர கார்கள் சுவையானவை என்பதை புலியும் ஒப்புக்கொண்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். புலி ஒன்று காரை கடித்து இழுக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டரில் பக்கதில் பதிவிட்டுள்ளார்.…

மகேந்திர கார்கள் சுவையானவை என்பதை புலியும் ஒப்புக்கொண்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

புலி ஒன்று காரை கடித்து இழுக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டரில் பக்கதில் பதிவிட்டுள்ளார். அதில் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் வனப்பகுதி சாலையில் தெப்பக்காடு அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்,

புலி இந்த காரை கடிப்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஏனென்றால், மகேந்திர கார்கள் மிகவும் சுவையானது என்பதை புலியும் ஒப்புக் கொண்டுள்ளது என ஆனந்த மகிந்திரா நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை, ஆனந்த் மகேந்திரா நகைச்சுவையுடன் பதிவிட்டு இருந்தாலும், மகேந்திரா கார் பயன்பாட்டாளர்களும் அவரை பின்தொடர்பவர்களும், கமெண்டுகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.