தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள்; 3 பேர் கைது!

சென்னையில், தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் மேற்பார்வையில் மணிமங்கலம்…

சென்னையில், தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் மேற்பார்வையில் மணிமங்கலம் உதவி ஆணையாளர் ரவி டிபிஎஸ் தலைமையில், மணிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் தாமோதரன் சந்திரன் எபினேசர் கணேஷ்குமார் பசுபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட்-இந்திய மகளிர் அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி’

இந்த தேடுதல் வேட்டையில், கூடுவாஞ்சேரி வள்ளுவர் காலணியைச் சேர்ந்த ஜான் கென்னடி, படப்பை ஆதனஞ் சேரியைச் சேர்ந்த முகத்துப்பாண்டி மற்றும் சோமங்கலம் நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமியிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 165 கிலோ எடை கொண்ட புகையிலை மற்றும் பாக்கு பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.