திடீரென ஏற்பட்ட வலிப்பு… கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பலி

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும்போது திடீரென வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத…

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும்போது திடீரென வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திக்கடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது. அப்பொழுது, மேலத்தெரு பகுதியைச் சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற முதியவர் கூல் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டபோது கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.

அதீத வெப்பத்துடன் இருந்த கூழானது முருகனின் உடல் முழுவதும் கொட்டியதால் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் முதியவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.