நாளை முதல் உயர்கிறது ஆரோக்யா பால் மற்றும் தயிர் விலை: ஹட்சன் நிறுவனம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை முதல் ஆரோக்யா பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கடுமையான பால் தட்டுப்பாடு, நடப்பு ஆண்டில் கோடைக்கால மழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட பால் உற்பத்தி பாதிப்பு, மேலும் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கும் கொள்முதல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயற்த்தியுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் நாளை முதல் ஆரோக்யா பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக ஹட்சன் (Hatsun) நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை உயர்வு விவரங்கள்:

ஆரோக்யா பால்:

அரை லிட்டர் (1/2 L) பாலின் விலை ரூ.2 உயர்த்தப்படுகிறது.

ஒரு லிட்டர் (1 L) பாலின் விலை ரூ.3 உயர்த்தப்படுகிறது.

ஆரோக்யா தயிர்:

அரை லிட்டர் (1/2 L) தயிரின் விலை ரூ.2 உயர்த்தப்படுகிறது.

ஒரு லிட்டர் (1 L) தயிரின் விலை ரூ.3 உயர்த்தப்படுகிறது.

இந்த புதிய விலை உயர்வு நாளை முதல் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.