செஸ் ஒலிம்பியாட்-இந்திய மகளிர் அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி

இந்தியா ஓபன் மற்றும் மகளிர் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 24-0 என அபார வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில் 6 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 6…

இந்தியா ஓபன் மற்றும் மகளிர் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 24-0 என அபார வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில் 6 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 6 புள்ளிகளும் பெற்று அசத்தல் வெற்றி பெற்றது.

மகளிர் பிரிவில் 3 அணிகளும் எதிர் அணிகளை ஒயிட் வாஷ் செய்தது. போட்டியில் பங்கு பெற்ற 24 பேரும் அடுத்தடுத்து வெற்றி பெற்று நாளை இரண்டாம் சுற்றை சந்திக்க தயாராக உள்ளனர். மகளிர் அணி வெற்றி விவரம் – முதல் சுற்று

இந்திய மகளிர் அணி A – தஜிகிஸ்தான்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. கொனெரு ஹம்பி – ஆண்டனோவா
கருப்பு நிறம், 41 வது நகர்த்தலில் வெற்றி

2. வைஷாலி – அப்ரோவா
வெள்ளை நிறம், 39 வது நகர்த்தலில் வெற்றி

3. தனியா சச்தேவ் – சைதோவா
கருப்பு நிறம், வெற்றி

4. குல்கர்னி பாக்தி – ஹொட்டாமி
வெள்ளை நிறம், 50 வது நகர்த்தலில் வெற்றி

இந்திய மகளிர் அணி B – வேல்ஸ்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. வந்திகா அகர்வால் – ஒலிவியா
கருப்பு, 56 வது நகர்த்தலில் வெற்றி

2. சவுமியா சாமிநாதன் – கிம்பர்ளி
வெள்ளை, 37 வது நகர்த்தலில் வெற்றி

3. கோமேஸ் மேரி அண் – ஹியா ரே
கருப்பு, 29 வது நகர்த்தலில் வெற்றி

4. திவ்யா தேஷ்முக் – குஷி
வெள்ளை, 34 வது நகர்த்தலில் வெற்றி

இந்திய மகளிர் அணி C – ஹாங் காங்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. கர்வதே ஈஷா – சிவப்பி கண்ணப்பன்
வெள்ளை , 49 வது நகர்த்தலில் வெற்றி

2. நந்திதா – ஜிங் சீன்
கருப்பு, 29 வது நகர்த்தலில் வெற்றி

3. சாஹிதி வர்ஷினி – ஜாய் சிங்
வெள்ளை, 37 வது நகர்த்தலில் வெற்றி

4. பிரத்யுஷா போடா – லேம் காய் யான்
கருப்பு, 32 வது நகர்த்தலில் வெற்றி

இவ்வாறாக முதல் நாள் போட்டியில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை தந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.