நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி மற்றும் கிங் மேக்கர் ஐஏஎஸ் அகடாமி இணைந்து நடத்தும் ‘பயிற்சி பட்டறை’ நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி போட்டி தேர்வு பயிற்சி மாணவர்களுக்க கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து ‘பட்டறை 2022’ ஒரு நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். எவ்வாறு படிக்கலாம், என்பது போன்ற பல யுக்திகளை மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் வழங்கினர்.
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன்(ஐ ஏ எஸ்) நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி பட்டறை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இருந்தனர். டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வை பொறுத்தவரை மிகவும் கடினம் தன்னால் முடியாது என மாணவ மாணவிகள் நினைக்கிறார்கள் அது தவறு கடினமான படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
நியூஸ் 7 தமிழின் இந்த செயல் பாரட்டுத்தலுக்குறியது. நாங்கள் எதிர்பார்க்காத அளவில் ஆர்வமுடன் சந்தேகங்களை அதிகளவில் மாணவ, மாணவிகள் முன் வைத்தனர். பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டு சந்தேக கேள்விகள் முன் வைத்தது எனக்கே வியப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வெரு மாணவ, மாணவிகளும் நாள் ஒன்றிற்கு 5 அல்லது ஆறு மணி நேரம் வரை படிப்பதற்காக செலவிட்டால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறலாம். வாழ்க்கையை எளிமைபடுத்த தான் செல் போன் பயன்பாடு உபயோகிக்க வேண்டும். ஆனால் தற்போது நமது வாழ்க்கையை கவர்ந்து வருகிறது என்று கூறினார்.
டெக்னாலஜியில் டிஎன்பிஎஸ்சி சம்பந்தமாக அதிக நோட்ஸ் அப் அதிகம் உள்ளன. அதை பயன்படுத்தினால் டெக்னாலஜியும் நம் வசம் பயன்படுத்தி தேர்விவ் வெற்றி பெறலாம். எனவே மாணவ, மாணவிகள் அவ்வாறு செய்ய முன் வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கூறுகையில், உயர் கல்வி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தொலை காட்சி மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இது மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமைத்துள்ளது.அதிக வரவேற்பு பெற்றுள்ள இந்த பட்டறை நிகழ்ச்சியை நான் வரவேற்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலம் இந்த உலகத்திற்கு தேவை. எந்த தேர்வை எடுத்து கொண்டலும் போட்டிகள் அதிகம் தற்போது அதிகம் உள்ளன. அதற்கு ஏற்றது போல் மாணவ மாணவிகள் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர்களும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.








