2019-20 ஆண்டில் தேசிய அளவிலான பள்ளி மற்றும் பல்கலைகழக விளையாட்டுப்
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை விடுவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான
பள்ளி மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பில்
பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்புதலின்படி ரூ. 2 கோடியே 13
லட்சத்து 50 ஆயிரம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற பள்ளி மற்றும்
பல்கலைக்கழகங்களுக்கான தடகள, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சதுரங்கம், பளு
தூக்குதல், வலு தூக்குதல், நீச்சல், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து 144 பேர் பங்கேற்று 49 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில்
இருந்து தங்கம் வென்றவர்களுக்கு தலா 3 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு தலா 2
லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு தலா 1.5 லட்சம் என பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆடவர் 53 பேருக்கு 75.50 லட்சம், மகளிர் 91 பேருக்கு 1.38 கோடி என மொத்தமாக 2 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்து அரசாணை வெளியியிடப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







