தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ்…

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரமேஷ்(61) மற்றும் அவரது மனைவி மரியா ரமேஷ்(55) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் இல்லாத 6 ஏக்கர் நிலத்தை வைத்து கட்டுமான ஒப்பந்தம் செய்து 18.5கோடி ரூபாய் மோசடி செய்ததாக ரமேஷ் மற்றும் மரியா ரமேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் 18.5 கோடி ரூபாயை மோசடி செய்து ஆஸ்திரேலியாவில் உள்ள, தங்களது மகன் பிரவீன் நடத்தும் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரவீன் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு இதே நிலத்தை வைத்து 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், இம் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.