இளவரசர் ஹாரி எழுதி வெளியாக உள்ள ‘ஸ்பேர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் இங்கிலாந்து அரண்மனையில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி சகோதரர்கள் இடையே நடந்த மோதல் அம்பலமாகியுள்ளது.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியினரின் இளைய மகன்தான் இளவரசர் ஹாரி.38 வயதாகும் இவர் தன்னுடன் மூன்று வயது மூத்தவரான மேகன் என்ற அமெரிக்க நடிகையை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் அரச குடும்பத்தில் மிகப்பெரும் புயலை ஏற்படுத்தவே, மனம் நொந்துபோன ஹாரி, தனக்கு எந்தவிதமான அரச பதவிகளும் வேண்டாம் என்று கூறி மனைவி மேகன் மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவில் கலிபோர்னியா சென்று குடியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில்தான் தனது வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் 10-ஆம் தேதி 16 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அண்மைச் செய்தி : 70 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை காப்பாற்றியது காங்கிரஸ்: பாஜகவை தாக்கிய கார்கே
அப்புத்தகத்தில் இளவரசர் ஹாரி கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு,
லண்டன் வீட்டின் சமையலறையில் 2019-ஆம் ஆண்டு நடந்த ஒரு வாக்குவாதத்தின் போது, மூத்த சகோதரரான வில்லியம் தனது மனைவி மேகனை ‘கடினமானவர், முரட்டுத்தனமானவர் மற்றும் சிராய்ப்புள்ளவர்’ என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாகவும், ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் மோதல் அதிகமாகி “வில்லியம் என் காலரைப் பிடித்து, கழுத்துச் சங்கிலியை இழுத்து, என்னை தரையில் தள்ளிவிட்டார்.
வில்லியம் தள்ளி விட்டதில் நான் நாய்க்கு சாப்பாடு வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தட்டில் சென்று விழுந்தேன். இதனால் என் முதுகில் சிறு கீறல் மற்றும் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. வில்லியம் அப்போது நிதானம் இல்லாமல் நடந்துகொண்டதால் மோதல் முற்றிய நிலையில் அதுகுறித்து ஊடகங்களிடம் பேச போவதாக கூறினார்.அவர் எந்த நிலையிலும் என்னை புரிந்துகொள்வதாக இல்லை.
இவ்வாறு அந்த புத்தகத்தில் ஹாரி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஆகிய இருவரும் மிகவும் மனம் நொந்தாக தெரிவித்துள்ள ஹாரி, அப்பா சார்லஸ் எனது கடைசி காலத்தை துயரமாக்கி விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
தற்போது வில்லியம் மற்றும் ஹாரியின் மோதல் குறித்து அரசர் குடும்பத்து சண்டையில் வெல்லப்போவது யார் என்ற கேள்வியை எழுப்பி ட்விட்டர் பயனர்களுக்கிடையே விவாதங்களும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.