தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறலால் ஒத்தி வைப்பு- அமைச்சர் ரகுபதி

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறிய காரணத்தில் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.…

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறிய காரணத்தில் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்த முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், இன்று நடக்க இருந்து ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியும். தமிழகத்தில் முதன் முதலாக நடைபெறும் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறப்பட்டு சிறு தவறு ஏற்பட்டால் கூட, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை அது பாதிக்கும்.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் சரிவர நடைபெறாத காரணத்தினால்
தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை.
விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தடைபடுவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் காரணம் ஆகிவிடும்.

பட்டியல் இன மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அரசு தமிழக அரசு. தமிழகத்தில் இரட்டை குவளை முறையை முழுமையாக ஒழிப்பதுதான் திமுக அரசின் நோக்கம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.