முக்கியச் செய்திகள் இந்தியா

தாயின் தகனம் முடிந்த உடனேயே மக்கள் பணியில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த தாயின் தகனத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி வாயிலாக அவர் துவக்கினார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இதையடுத்து அகமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் மலர்வளையம் வைத்து தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு தாயின் உடலை தனது தோளில் சுமந்து சென்ற பிரதமர் மோடி அங்கு அவரின் சிதைக்கு தீமூட்டி இறுதிசடங்கு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

துயரிலும் தொய்விலா மக்கள் பணியில் பிரதமர்

தான் பெரிதும் நேசித்தத் தாய் அதிகாலையில் மறைந்த செய்தி கேட்ட உடனேயே பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் குஜராத் விரைந்தார். அங்கு நடந்த இறுதி சடங்கிலும் தாயின் உடலை தோளில் சுமந்து சென்று மயானத்தில் தாயின் சிதைக்கு தீமூட்டினார். ஒரு மகனாக தனது கடமையை செய்த பிரதமர் மோடி, அடுத்தபடியாக பிரதமராக மக்கள் பணியிலும் உடனடியாக இறங்கினார்.

வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சி

இதையடுத்து பிரதமர் மோடி இன்று திட்டமிட்ட படி அரசு நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பங்கேற்றார். மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் மேற்கு வங்கத்திற்கு வரவிருந்தேன், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் அங்கு வர முடியவில்லை. அதற்காக வங்காள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

இந்திய ரயில்வேயை நவீனப்படுத்த மத்திய அரசு சாதனை படைத்து வருகிறது. இப்போது இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த 8 ஆண்டுகளில் ரயில்வேயை நவீனமயமாக்கும் புதிய பயணத்தை காண்போம் என பிரதமர் மோடி கூறினார்.

நிகச்சியில் பேசிய வங்க தேச முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மேற்கு வங்க மக்கள் சார்பாக மிக்க நன்றி. இது உங்களுக்கு ஒரு சோகமான நாள். உங்கள் தாய் என்றால் எங்கள் அம்மா என்றும் அர்த்தம். உங்கள் பணியை தொடர கடவுள் உங்களுக்கு வலிமை தரட்டும், கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து பிரதமருக்கு ஆறுதல் கூறினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், முன்னதாக டெல்லி-வாரணாசி, டெல்லி-ஜம்மு, மும்பை-காந்திநகர், சென்னை-மைசூரு உள்ளிட்ட 6 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிந்திக்க வைக்கும் ’தலைக்கூத்தல்’ – திரைவிமர்சனம்

Yuthi

பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது! – பிரதமர் மோடி

Nandhakumar

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

Web Editor