1956 நவம்பர் 1 அன்று இயற்றப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மொழிவாரி மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டன. இந்தச் சட்டத்தின்படி, இந்தியா முதற்கட்டமாக 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் பகுதிகளை உள்ளடக்கிய தனி மாநிலம் உருவானதை நினைவுகூரும் சிறப்பு நாளே தமிழ்நாடு நாளாகும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




