சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தில் முதல் தேதியில் நிர்ணயம் செய்கின்றன.
அந்தவகையில், நடப்பு மாதமான நவம்பரில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான எருவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.11 உயர்ந்து ரூ.3,016.50 காசுகளுக்கு விற்பம்னை செய்யப்படுகிறது.
அதே சமயம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




