கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதளம் குறித்து இன்று சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.
உலகெங்கிலும் கோவின் (CoWIN ) இயங்குதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி, சர்வதேச கருத்தரங்கில் இன்று மாலை 3 மணிக்கு உரையாற்ற உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கோவின் எனும் டிஜிட்டல் தளத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ள கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு கோவின் செயலி மென்பொருளை இலவசமாக பகிர்ந்து கொள்வது குறித்தும் கோவிட் தடுப்பூசி இந்தியாவின் அனுபவத்தையும், எண்ணத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







