பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து தேசியப் பொறுப்பாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக புதிய தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து தேசியப் பொறுப்பாளர்களுக்கும், அத்துடன் கட்சிக்குள் பல்வேறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த ஆற்றல்மிக்க குழு, ஏராளமான அமைப்பு ரீதியான அனுபவத்தை மட்டுமல்லாமல், வலுவான அடிமட்டத் தொடர்பையும் கொண்டுள்ளது. நமது இந்தத் தோழர்கள், முழு அர்ப்பணிப்புடன், பொதுநலப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதோடு, கட்சியையும் வலுப்படுத்துவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.