ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இந்தோனேசியாவுக்கு இன்று செல்லவுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 15, 16ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், உக்ரைன்விவகாரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்மரீதியிலான மாற்றம், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்தறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டர் பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் இதானுவேல் மேக்ரான், ஜெர்மன் ரிபதமர் ஓலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பில் அர்ஜெர்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில் கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.







