பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக…

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எம்பிக்களின் வருகை குறித்து கவலை தெரிவித்தார். மேலும், எம்பிக்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் மாற்றங்கள் ஏற்படலாம் என அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம் நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதியுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ளதால் அவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பாஜக எம்பிக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பா.ஜ.க. தனது பாராளுமன்ற கட்சியின் கூட்டத்தை இன்று நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.