சமூக வலைத்தளத்தில் தவறான செய்தியை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சேலம் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவா சத்திரத்தில் உள்ள பன்நாட்டு தொழிற்சாலை (Foxconn) நிறுவன விடுதியில் உணவு உண்ட 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 8 பெண் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக அங்கு நடைபெற்ற போராட்டத்திற்கு சென்ற வளர்மதியை, சமூக வலைத்தளத்தில் தவறான செய்தியை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் வளர்மதி சார்பில் ஜாமின் கோரி விண்ணப்பிக்கபட்டது. தற்போது, நிபந்தனைப்பிணையுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையில், காலை, மாலை என இருவேளை MGR நகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.








