புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் பணிகள் நிறைவடைந்ததால், அண்மையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/news7tamil/status/1472095077417709572
இதற்காக ஜனவரி மாதம் 12-ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றப்பின், பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது இதுவே, முதல்முறை.








