வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராணி லக்‌ஷ்மி பாய் மற்றும்…

ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராணி லக்‌ஷ்மி பாய் மற்றும் ராணி வேலுநாச்சியார். இவர்களில் இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.

ராணி வேலுநாச்சியாரின் 282-வது பிறந்த தினமான இன்று, பிரதமர் மோடி, ராணி வேலுநாச்சியாரை போற்றும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.