ஆன்லைன் சூதாட்ட தடை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

சென்னையில் நாளை மறுநாள் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையில் நாளை மறுநாள் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்தின் காரணமாக நான்கு மாதங்களில் ஏழு உயிரிழப்பு  நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் குடும்பம் சூதாட்டத்தின் காரணமாக உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனுமதித்தால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என கூறியுள்ளார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வராததையும் ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவது தான் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.