முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்

கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர்.

கர்நாடகாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கலபுர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பாரம்பரியமான டிரம்ஸை கைகளில் ஏந்தி வாசித்தார். பிரதமர் மோடி மேளம் வாசித்தபோது, ​​அங்கு இருந்த மக்கள் அவரை ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். பிரதமர் மோடி எந்த ஒரு இசைக்கருவியையும் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இந்தியாவில் மட்டுமல்லாது தனது வெளிநாட்டு பயணத்தின் போதும் பல இசைக்கருவிகளை வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் இம்மாவட்டத்தில் உள்ள கொடேகலில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம், பாசனம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துப் பேசிய அவர், பாஜக அரசின் முன்னுரிமை வளர்ச்சிக்கு மட்டுமே என வலியுறுத்தினார். மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருப்பதன் நேர்மறையான அம்சத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இரட்டை எஞ்சின் ஆட்சி என்பது இரட்டை நன்மை, இரட்டிப்பு நலன் மற்றும் இரட்டை வேகமான வளர்ச்சி, இதற்கு கர்நாடகா சிறந்த உதாரணம் என்றார்.

மேலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மாநிலமும் முனைப்புடன் செயல்பட்டால் தான் இந்தியா வளர்ச்சியடையும். கடந்த 10 ஆண்டுகளின் மோசமான அனுபவங்கள் மற்றும் தவறான கொள்கைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த பகுதியில் வளர்ச்சி சாத்தியமான போதிலும், யாத்கிரி மற்றும் வடக்கு கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலைகள் நம் முன் உள்ள உதாரணங்கள் என்றார்.

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவுக்கு இந்த மாதத்தில் பிரதமர் செல்வது இது இரண்டாவது முறையாகும். அவர் ஏற்கவே கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ஹுப்பள்ளியில் தேசிய இளைஞர் விழாவைத் துவங்கி வைத்து பேசினார். ஆளும் பாஜக அரசு மே மாதத்திற்குள் கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவதால், மொத்தமுள்ள 224 இடங்களில் குறைந்தபட்சம் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பகவந்த் குபா, மாநில அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரையில் குழந்தை பலியான விவகாரம்; போலீசார் விசாரணை

G SaravanaKumar

பட்ஜெட் தாக்கல் தேதி அறிவிப்பு!

Janani

“நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலை” – முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

Jeba Arul Robinson