முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சென்னையில் இன்று 1,600 முகாம்களில் தடுப்பூசி

சென்னையில் 1600 முகாம்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்ட முகாமில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடக்கி றது. 20,000 முகாம்களில் நடக்கும் இந்த முகாம்களில் இன்று மட்டும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு துறை, கடலூர் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்கிறார் . சென்னையில் 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

முதல் டோஸ், இரண்டாம் டோஸ் போடாதவர்கள் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம் களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

Advertisement:
SHARE

Related posts

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது

Jeba Arul Robinson

பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?

Ezhilarasan

2-வது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்!