பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா- பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில் அணுசக்தியில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான புவிசார் அரசியலில் காணப்படும் சவால்கள் குறித்தும் விவாதித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நிலவும் மோதலின் காரணமாக, உலக நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஆபத்து குறித்து இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
மேலும், மேக்ரோனுடனான தனது உரையாடலில், பிரான்சில் நிலவும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றிற்கு பிரதமர் மோடி தனது ஒற்றுமையை அவருக்குத் தெரிவித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா-பிரான்ஸ் வியூக கூட்டாண்மை பெற்றுள்ள வலிமை குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததோடு, ஒத்துழைப்பின் புதிய உறவை விரிவுபடுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினத்தன்று மேக்ரோனின் வாழ்த்துகள் தன்னைத் தொட்டதாகவும், பிரான்சுடனான நெருங்கிய உறவை இந்தியா உண்மையிலேயே மதிக்கிறது. மேலும் இருதரப்பு கூட்டாண்மை உலக நன்மைக்காக உள்ளது என்று பிரதமர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.