பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதல் ஒரு நாள் ஆட்டம் நேர்று ரோட்டர்டாமில் நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் சதம் பதிவு செய்து அசத்தினார்.
கேப்டன் பாபர் ஆசாம் 74 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து தரப்பில் வேன் பீக், பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 65 ரன்களும், டாம் கூப்பர் 65 ரன்களும் எடுத்தனர். கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.