மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம். இந்த விமான நிலையம் நாட்டில் மிகவும் பரபரப்பாக இயங்கும் 36வது விமான நிலையம் ஆகும்.
1957ம் ஆண்டு இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டது.
சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் நகரங்களும், சிங்கப்பூர், துபாய், கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரையில் இருந்து விமான சேவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதற்காக விமான நிலையத்தைசுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு (புறம்போக்கு) நிலங்களைத் தவிர்த்து மீதி உள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ.97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.








