ரஷ்ய அதிபர் புதினுக்கு ‘திருக்குறள்’-ஐ பரிசளித்த பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார்.

18-வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் தலைமையில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. நாளை (செப். 12) மற்றும் நாளை மறுநாள் (செப். 13) ஆகிய இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இதில் நாடுகளுக்கு இடையிலான மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மைக்கான உருவாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை தொடங்க உள்ள 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், நைஜீரிய துணை அதிபர் காஷிம் ஷெட்டிமா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பைப் பரிசளித்து வரவேற்றார்.

சர்வதேசத் தலைவர்களுக்கு இந்தியப் பண்பாட்டையும் தமிழ் இலக்கியச் செறிவையும் எடுத்துரைக்கும் பிரதமர் மோடியின் இந்த ராஜதந்திர கலாச்சாரப் பரிசு, உலகளவில் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. உலகளவில் தமிழின் பெருமையையும் திருவள்ளுவரின் உலகளாவிய சிந்தனைகளையும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த சிறப்புப் பரிசு அமைந்துள்ளதாகக் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபர் புட்டினுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பட்டிருப்பது இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளுக்கு அப்பால், பண்பாட்டு மற்றும் இலக்கிய ரீதியிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.